
FROM THE
BISHOP'S DESK

விசுவாச சபை ஊழியங்கள்
• TBC GERMANY
இணைய வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
எங்கள் தேவாலய குடும்பத்தைக் கண்டுபிடித்து,
சில நிமிடங்களை சுற்றிப் பார்க்க நீங்கள் எங்கள் இணையதள பக்கத்தை தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
நாங்கள் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுவதில் உறுதியாக உள்ள ஒரு சபை.
அதாவது நாம் அவரை முழு உள்ளத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஆராதிக்கிறோம்.
அதாவது சபையில் துதி மற்றும் ஜெபத்தை ஊக்குவிக்கிறோம்.
அதாவது உதவும் மனப்பான்மை, கைப்பிரதிகள் வழங்குதல் மற்றும்
சபைக்கு வெளியே உள்ளவர்களை நாங்கள் நேசிப்பதையும் ஊக்குவிக்கிறோம்.
எங்கள் சபையில் அனைத்து மக்களும் நேசிக்கப்படுவதையும்,
வரவேற்கப்படுவதையும் அனைவரும் உணருவார்கள் என்பது எங்களது
நம்பிக்கை. சபையில் மக்கள் இரட்சகரை சந்திப்பது, கர்த்தரை சந்தித்ததன் மூலம் தங்கள் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்குக் அர்பணிப்பது என்று எல்லா நிலையிலும் இவர்கள் வளர வேண்டும் என்றும் ஜெபிக்கிறோம்.
நாங்கள் உங்களுக்காக இதைச் செய்ய விரும்புகிறோம். நீங்கள் இருக்கும் வண்ணமாகவே வாருங்கள். எங்களுடைய ஆராதனை, ஜெபம்,
தேவ வார்த்தைகளை கவனித்து பாருங்கள்.
மிக முக்கியமாக, இயேசு கிறிஸ்துவை அறிந்து அவரைப் பற்றி அறியக்கூடிய சத்தியத்தைத் தேடுங்கள். நீங்கள் எங்கள் இணைய வலைத்தளத்தில் உலவும்போது, எங்கள் திட்டங்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்வீர்கள், அப்போது நாங்கள் யார் என்பதைப் பற்றிய ஒரு பார்வையைப் பெறுவீர்கள், ஆனால் ஒரு பார்வை மட்டுமே. எங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது, ஒரு வழிபாட்டு சேவைக்கு அல்லது ஒரு சிறிய குழுவிற்கு வந்து, பரிசுத்த ஆவியானவரோடு மக்கள் நேரத்தை பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் நெருக்கமான, நேரடியான கூட்டுறவை உணருங்கள்.
முதலில் எங்கள் இணைய வலைத்தளத்தை அனுபவியுங்கள், பின்னர்
எங்கள் சபைக்கு வாருங்கள்.
உங்களைச் சந்தித்து உங்களைப் பற்றி அறிய நாங்கள் விரும்புகிறோம்.
நன்றி.
Bishop Dr. G. A. Antony, தலைமை பேராயர்